சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது பானங்களை பதுக்கி விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-05 03:50 GMT
பைல் படம் 

தர்மபுரி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி காவலர்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன்படி நேற்று மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்கள் தர்மபுரி, தொப்பூர், மொரப்பூர், பாலக்கோடு, அரூர், பென்னாகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு பகுதி களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 5 பேர் காவலர்களிடம் சிக்கினார்கள். இது குறித்து விசாரணை நடத்திய காவலர்கள் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

Tags:    

Similar News