ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னவர்கள் வந்தே மாதரம் என்கிறார்கள்: செல்வபெருந்தகை
பா ஜனதா ஆட்சி மோசமாக உள்ளதால் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னவர்கள் தற்போது வந்தோம் மோதிரம் என்கிறார்கள் என செல்லப்பெருந்தகை பேசினார்.
திருப்பூர், பா.ஜனதா ஆட்சி மோசமாக உள்ளதால், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னவர்கள் தற்போது வந்தே மாதரம் என்கிறார்கள் என, திருப்பூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார். திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் திருப்பூரில் நடந்தது. தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- தேசத்தின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி வலுவடைய வேண்டும். மத்தியில் உள்ள பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சி. 57 ஆண்டுகால பாரம்பரியமிக்க கட்சி. தற்போது 10 ஆண்டுகளாக பாசிச கட்சிகளின் பிடியில் நாடு சிக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சியை முதன்மை கட்சியாக மாற்றுவோம். காங்கிரஸ் கட்சியில் இடம்பெற இளைஞர்கள் ஏங்குகிறார்கள். மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம். பொருளாதாரம் வளரவும், நாடு வளரவும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ளது. ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னவர்கள் தற்போது வந்தே மாதரம் என்று கூறுகிறார்கள். அந்த அளவிற்கு பா.ஜனதா ஆட்சி மோசமாக உள்ளது. இவர் அவர் பேசினார். இதன் பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் இந்த கூட்டம் நடக்கிறது. வரும் 21ம் தேதி ராஜிவ் காந்தி நினைவு அஞ்சலி கூட்டம் ஶ்ரீபெரும்புதூரில் நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் அமைதி ஊர்வலம் நடத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மோடி ஆட்சியில் எல்லா துறையும் விழ்ச்சி, இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார். தேர்தல் கூட்டங்களில் அமித்ஷாவின் பேச்சு தீவிரவாத பேச்சு. ஆனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.
தேசிய நெடுஞ்சாலை விபத்துகள் நாளுக்கு நாள் கூடிவருகிறது. மோடி ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலை துறை தோல்வியை தழுவி உள்ளது. அவர்கள் ஏன் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய தேசத்தில் சட்டத்தை மதிக்காமல் பாசிச ஆட்சி நடத்தி வரும் மோடி,
அமித்ஷா மீது கூட நாங்கள் புல்டவுசரை விட மாட்டோம். ஆனால் சாதாரண மக்கள் மீது புல்டவுசரை விடும் பாஜகவின் அரசியல் குவாலிட்டி இவ்வளவுதான். 3-ம் கட்ட தேர்தல் பின்னர் 400தொகுதியை பற்றி பேசுவதை மோடி விட்டுவிட்டார். மக்கள் முடிவு செய்து விட்டார்கள் மோடியை வீட்டுக்கு அனுப்ப, ராகுல் காந்தி பிரதமராக வருவார். இவ்வாறு அவர் கூறினார்.