சோஷியல் மீடியாவில் புகைப்படத்தை பதிவிடுவதாக கூறி மாணவியிடம் மிரட்டல்

கோவையில் தான் விரும்பிய பெண் பிரிந்து சென்றதால், இருவரின் புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிடுவதாக மிரட்டிய மாணவனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-01-13 08:50 GMT

பைல் படம்

கோவை: சுந்தராபுரம் மாச்சம்பாளையத்தை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகள் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இதே பகுதியில் உள்ள வி.எல்.பி ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பிரியன் என்பவர் பி.எஸ்.சி ஐடி படித்து வருகிறார்.பிரியனுடனான காதல் விவகாரம் தெரிய வர காளிமுத்து தனது மகளை கண்டித்தை தொடர்ந்து இருவரின் காதல் முறிவடைந்தது.

Advertisement

இந்நிலையில் சம்பவத்தன்று பிரியன் அலைபேசி மூலம் அழைத்து தன்னை வந்து சந்திக்க வேண்டும் எனவும் இல்லையெனில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்வேன் என மிரட்டி உள்ளார்.இதனை தொடர்ந்து கல்லூரியில் உள்ள உணவகம் சென்ற காளிமுத்துவின் மகள் தன்னை சந்திக்க வர வேண்டாம் எனவும் கல்லூரி படிப்பிப் கவனம் செலுத்த உள்ளதாக கூறியதால் ஆத்திரமடைந்த பிரியன் மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து காளிமுத்துவின் மகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் பிரியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News