முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய மூவர் கைது

திருக்காம்புலியூரில் முன்விரோதம் காரணமாக, இளைஞரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தநிலையில், ஒருவர் தலைமறைவு ஆகியுள்ளார்.

Update: 2024-01-16 12:30 GMT

திருக்காம்புலியூரில்,முன் விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய மூவர் கைது. ஒருவர் தலைமறைவு. கரூர் மாவட்டம், மாயனூர் காவல் எல்லைக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் முகிலன் வயது 19. அருகில் உள்ள மேட்டு திருக்காம்புலியூர், தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் ரகு, பாரதிராஜா, சதீஷ்குமார், பிரசாந்த். இந்த இரு தரப்பினருக்கும், ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி 15ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் திருக்காம்புலியூர் பகவதி அம்மன் கோவில் அருகே முகிலன் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த ரகு, பாரதிராஜா, சதீஷ்குமார், பிரசாந்த் ஆகியோர் தன்னிச்சையாக சென்று முகிலனிடம் தகராறு செய்துள்ளனர். மேலும், தகாத வார்த்தை பேசி தடியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

இந்த சம்பவத்தில் வலது காலில் முகிலனுக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக முகிலன் மாயனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ரகு,பாரதிராஜா, சதீஷ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர். இதில் பிரசாந்த் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் மாயனூர் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News