பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது
மித்ரா நகரில் பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
Update: 2024-05-13 15:57 GMT
மித்ரா நகரில் பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 150 பறிமுதல். கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் மே 12ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில், அப்பகுதியில் உள்ள மித்ரா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய குப்பம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல், நித்யா சேகர், க.பரமத்தி, காந்தி நகரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.150-யும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க.பரமத்தி காவல்துறையினர்.