மருந்துக்கடையில் திருடிய மூவர் கைது
திருவாரூரில் மருந்துக்கடையில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-02-27 09:20 GMT
திருவாரூரில் மருந்துக்கடையில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
வடபாதிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது திருவாரூர் மாவூர் கடை தெரு அன்னை மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட திருவாரூர் விஜயபுரம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் பிரவீன் திருவாரூர் அலிவலம் பகுதியைச் சேர்ந்த சாய சுந்தரம் என்பவரின் மகன் மூர்த்தி மற்றும் ஒருவரை மிக சாதுரியமாக செயல்பட்டு இரவு ரோந்து பணி காவலர்கள் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் ஆயிரம் பணம், மாத்திரைகள் இருவது மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய மாருதி ஆம்னி வேன் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.