சொத்து தகராறில் பெண்ணை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட மூவருக்கு சிறை
பாப்பாரப்பட்டியில் குடும்ப தகராறில் பெண்ணை கொலை தாக்கி முயற்சியில் ஈடுபட்ட கணவர் உட்பட 3 பேருக்கு சிறை என மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே மருவீட்டு பள்ளத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி பீரி கடந்த 2012 ஆம் ஆண்டு சொத்து பிரிப்பதின் தகராறில் கோவிந்தராஜனுக்கு பாராபட்சம் காட்டியதாக பீரி குடும்பத்தினரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பீரிக்கும் கணவருடைய தம்பி ஜெயராமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிந்தராஜன் அவரது தம்பி ஜெயராமன் தங்கை கவிதா மூன்று பேரும் கோவிந்தராஜனின் மனைவியான பீரியை வீட்டு முன்பு வேப்பமரத்தில் கட்டி வைத்து பீரியை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரீ அளித்த புகாரின் அடிப்படையில் பாப்பாரப்பட்டி காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜன் ஜெயராமன் மற்றும் கவிதா எம்முறை கைது செய்தனர் இது விளக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது விசாரணை முடிவில் கோவிந்தராஜனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் ஜெயராமனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், கவிதாவிற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து,விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.