ரயில்வே நிலையம் பஸ் நிறுத்தம் பகுதியில் 4 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது !

ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் பஸ் நிறுத்தம் பகுதியில் 4 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-07-11 10:35 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் பஸ் நிறுத்தம் பகுதியில் 4 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பெயரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் இறங்கி ஜங்ஷன் பஸ் நிறுத்தத்திற்கு வந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் மூன்று பேரையும் கைது செய்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர், பழையூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் ஜெகதீஷ் (34), சொரக்காயல் நத்தம், வெள்ளநாயக்கனேரி பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் நவீன் (22), நாட்றம்பள்ளி, பழையூர் பகுதியை சேர்ந்த திருப்பதி மகன் விஷால் 20 என்பதும் இவர்கள் ஒரிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு விசாகப்பட்டினத்தில் இறங்கி அங்கிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்து பின்னர் ஆந்திர மாநிலம் மல்லானூர் மற்றும் பச்சூர் பகுதியில் உள்ள நபர்களுக்கு வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர் மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News