தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.

Update: 2024-05-31 16:33 GMT

சிறை தண்டனை 

பழனியை அடுத்த குரும்பப்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். கூலித் தொழிலாளி. இவா், கடந்த ஆண்டு தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியிடம் ஆபாச செய்கை காண்பித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, பழனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ், கிருஷ்ணனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், கிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி சரண் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

Tags:    

Similar News