விழுப்புரத்தில் தொடர் வழிபறியில் ஈடுபட்ட 3பேர் மீது குண்டர் சட்டம்

விழுப்புரத்தில் தொடர் வழிபறியில் ஈடுபட்ட 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2024-07-02 11:41 GMT

கைது செய்யப்பட்டவர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா தாலுகா ராய்ப்பூர் பகுதியை சேர்ந்த நசீர் மகன் சதாப் (வயது 35), முரதாபாத் மாவட்டம் கஜிபுரா பகுதியை சேர்ந்த அனிஸ் மகன் இர்பான் (42), புது டெல்லி ராஜீவ் நகரை சேர்ந்த அமீர் ஹுசைன் மகன் அலாவுதீன் (27). இவர்கள் 3 பேரும் விழுப்புரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த 6.4.2024 அன்று விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்த வழக்கில் 3 பேரையும் விழுப்புரம் மேற்கு போலீசார் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் இவர்கள் 3 பேரும் விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற பல்வேறு குற்றச்செயல்களில் 3 பேரும் ஈடுபட்டு வந்ததால் அவர்களுடைய இத்த கைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய,

மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாச் பரிந்துரை செய்தார். அதன்பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இதையடுத்து சதாப், இர்பான், அலாவுதீன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்த னர்.

இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் 3 பேருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News