குமரியில் மேலும் ஒரு  ரவுடிக்கு குண்டர் சட்டத்தில் கைது

குமரியில் மேலும் ஒரு  ரவுடிக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-28 14:16 GMT

கோப்பு படம் 

கன்னியாகுமரி மாவட்டம் கட்டாத் துறை பகுதியை சேர்ந்தவர் எட்வின் ராபர்ட் (43).  பிரபல ரவுடியான இவர் மீது கொல்லங்கோடு, இரணியல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில்  வழக்குகள் உள்ளன. சமீபத்தில் தக்கலை போலீசார் கொலை முயற்சி வழக்கில் எட்வின் ராபர்ட்டை கைது செய்தனர்.    

  இவரை குண்டர்  சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு எஸ் பி சுந்தரவதனம் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று எட்வின் ராபர்ட் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.      அதன்பேரில் போலீசார் எட்வின் ராவட்டை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வருடத்தில் குமரியில்  இதுவரை 29 பேர் குண்டர்  சட்டத்தின் கீழ்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News