குமரியில்  கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு

கன்னியாகுமரியில் கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு நாளை முதல் நேரக்கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.

Update: 2024-02-19 06:16 GMT
குமரியில் கனரக வாகன நேரக் கட்டுப்பாடு தொடர்பாக கலெக்டர் அலுவலக கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் ஓடுவதை முறைப்படுத்துவது தொடர்பான கலந்தாலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  பி.என்.ஸ்ரீதர்,  தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் முன்னிலை வகித்தார்.   இக்கூட்டத்தில் கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை  தடுக்கும் பொருட்டும், கனிம வளம் ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்துவது தொடர்பாகவும்,  வரும் செவ்வாய்க்கிழமை 20.02.2024 காலை முதல்  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கனிம வள சரக்கு காலி வாகனங்கள் (Empty Vehicles) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் (Load vehicles) காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தவிர பிற நேரங்களில் இயக்க அனுமதிக்கப்படுகிறது. என  மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், வருவாய் கோட்டாட்சியர்கள் எஸ்.காளீஸ்வரி (நாகர்கோவில்), செ.தமிழரசி (பத்மநாபபுரம்), நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, வட்டாட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News