காப்பீடு செய்ய அவகாசம்

நிகழாண்டு காரீப் (குறுவை) பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-25 13:46 GMT

நிகழாண்டு காரீப் (குறுவை) பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டு காரீப் (குறுவை) பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தஞ்சாவூர் 1-க்கு ஷீமா பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் 1-இல் தஞ்சாவூர், (பூதலூர் மற்றும் கண்டியூர் பிர்கா தவிர), ஒரத்தநாடு, திருவோணம் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி சேதுபாவாசத்திரம், அம்மாபேட்டை (அய்யம்பேட்டை மற்றும் பாபநாசம் பிர்கா தவிர) ஆகிய வட்டாரங்கள் அடங்கும்.  தஞ்சாவூர் 2-க்கு அக்ரிகல்சுரல் இன்குரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் 2-இல் தஞ்சாவூர் வட்டாரத்தில் பூதலூர் பிர்காவில் உள்ள சித்திரக்குடி கூடுதல், சித்திரக்குடி முதன்மை, மருதாக்குடி, ராயந்தூர் கிராமங்கள், கண்டியூர் பிர்காவில் உள்ள அரசூர். சின்ன அவுசாகிப் தோட்டம். கலியபானு ராஜா தோட்டம் மணக்கரம்பை, நாகத்தின், ராஜேந்திரம், செங்கழுநீர் தோட்டம், தென்பெரம்பூர் ஆகிய கிராமங்களும், அம்மாபேட்டை வட்டாரத்தில் அய்யம்பேட்டை பிர்காவில் உள்ள அகரமாங்குடி, பெருமாக்க நல்லூர், பொரக்குடி. செருமாக்கநல்லூர், கரைக்காயூர், வடக்கு மாங்குடி, வையச்சேரி, வேம்புக்குடி ஆகிய கிராமங்களும் பாபநாசம் பிர்காவில் உள்ள தேவராயன்பேட்டை, மேல செம்மங்குடி, பொன் மான் மேய்ந்த நல்லூர், புலிமங்கலம், திருவையாத்துக்குடி ஆகிய கிராமங்களும் பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களும் அடங்கும். 

நிகழாண்டு காரீப் (குறுவை) சிறப்பு பருவத்தில் நெல் பயிருக்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் 775 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. பயிர் காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ. 36 ஆயிரத்து 500, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமிய தொகை ரூ. 730, காப்பீடு செய்ய கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.  விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன் மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி 1434), வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம்" என்றார்.

Tags:    

Similar News