நேபாளத்திற்கு விளையாட தேர்வான மாற்றுத்திறனாளி

சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனிடம் வாழ்த்துப்பெற்ற மாற்றுத்திறனாளி தங்கம்.

Update: 2024-03-02 18:45 GMT
நேபாளத்தில் கைப்பந்து போட்டியில் விளையாட தேர்வான மாற்றுத்திறனாளி

நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி தங்கம் என்பவர், நேபாளத்தில் விளையாட கைப்பந்து போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்து விளையாட்டு போட்டியில் இடம்பிடித்து, நேபாளம் பகுதியில் விளையாடுவதற்காக தேர்வாகியுள்ளார். அதை தொடர்ந்து, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது அவருடன் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், மாவட்ட தலைவர் சேன்யோ குமார், திருச்செங்கோடு அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News