திருச்செங்கோடு நகராட்சி நகர்மன்ற கூட்டம்
நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சியில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அறிவுறுத்தல் திருச்செங்கோடு நகர் மன்றத்தின் சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் நகராட்சி ஆணையாளர் சேகர் பொறியாளர் சரவணன் நகர் நல அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சிறப்பாலைப்பாளராக கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சில திட்டங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினார். அணிமூர் குப்பை கிடங்குஎந்த நிலையில் உள்ளது எப்பொழுது முடிவு வரும், தினசரி சந்தை கட்டுமானப் பணி காலதாமதம் ஆவது ஏன் காரணம் இல்லாமல் காலதாமதம் ஆவதாக தெரிகிறது முயற்சி எடுத்து இருந்தால் மூன்று மாதத்தில் முடித்திருக்கலாம் இதற்கு என்ன காரணம், வாரச்சந்தை பணி வேகமாக நடந்து வந்தது தற்போது மெதுவாக நடப்பதற்கு என்ன காரணம் ஒப்பந்ததாரர்களுக்கு பில் பாஸ் செய்வதில் காலதாமதம் ஏன் ஏற்படுகிறது.
நகராட்சிகளில் உள்ள குளங்களை கோடிக்கணக்கில் செலவு செய்து புனரமைத்திருக்கிறோம் அதில் மீண்டும் ஆகாயத்தாமரை மூடி விடுமோ என அச்சம் உள்ளது தொடர் பராமரிப்பு ஏன் செய்வதில்லை, மலை அடி குட்டை பகுதியில் கேட்டு உடைக்கப்பட்டுள்ளது அது எடுத்து வைக்கப்பட்டு அப்படியே உள்ளது அதற்கு என்ன தீர்வு என்ன காரணம் பற்றை மேடு பகுதியில் சாலை அமைப்பதில் காலதாமதம் ஏன் நகராட்சி முனைப்பு காட்டவில்லையா தெரு நாய் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது தீர்வுக்கு நகராட்சி எடுத்த நடவடிக்கை என்ன கேட்டார், இதற்கு பதில் அளித்து நகராட்சி ஆணையாளர் சேகர் கூறியதாவது அணிமோர் குப்பை கிடங்கில் 35 ஆயிரத்து381 கியூபிக் மீட்டர் குப்பைகள் இருப்பதாகவும் அதனை பிப்ரவரி மாதத்திற்கு முடித்து விடுவதாகவும் கூறியிருந்தனர் ஆனால் தற்போது வரை 17,400 க்கு மீட்டர் இன்னும் இருப்பு உள்ளது தற்போது ஏப்ரல் மாதத்தில் முடித்துக் கொடுத்து விடுவதாக உறுதி அளித்திருக்கின்றனர்.
இரண்டு ஷிப்ட் நடத்தி வந்த நிலையில் 3 சொட்டு நடத்தி குப்பைகளை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் தினசரி சந்தை பணி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் காய்கறி கடைகள் என இரண்டு கட்டமாக திட்டமிடப்பட்டது 3 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டது நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தபோது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டிடமாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார் அதன்படி இரண்டாவது திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நான்கு கோடி 72 லட்சத்தில் பணிகள் உன்னால் முடிக்கப்பட்டுள்ளது அதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதால் காலதாமதம் ஆகிறது, பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு திறப்பு விழா காணும் என ஆணையாளர் சேகர் கூறினார்