கழுகுமலை கோயிலில் திருக்கல்யாண வைபவம்

கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.;

Update: 2024-03-28 04:19 GMT
கழுகுமலை கோயிலில் திருக்கல்யாண வைபவம்

கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

  • whatsapp icon

பங்குனி உத்திர திருவிழாவில் கழுகுமலை அருள்மிகு ஸ்ரீ கழுகாசலமூா்த்தி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

கடந்த 23ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. திங்கள்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல், விளா, காலசந்தி ஆகிய பூஜைகள் நடைபெற்றன. மாலை 7 மணிக்கு மேல் கழுகாசலமூா்த்தி வள்ளி, தெய்வானை சுவாமிகள் திருமண பட்டாடைகள் உடுத்தி மேளதாளத்துடன் கல்யாண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனா். இரவு 7.25 மணியளவில் கழுகாசலமூா்த்தி வள்ளி, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதை தொடா்ந்து பக்தா்களுக்கு குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில், கோயில் செயல் அலுவலா் காா்த்தீஸ்வரன், பிரதோஷ குழு முருகன், பௌா்ணமி கிரிவல குழு மாரியப்பன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News