திருநெல்வேலி எஸ்டிபிஐ புறநகர் மாவட்ட தலைவர் அறிக்கை
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என நெல்லை எஸ்டிபிஐ புறநகர் மாவட்ட தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.;
Update: 2024-06-24 08:00 GMT
ஏ.கே.மைதீன்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருந்தி பலியான மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதற்கு திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் ஏ.கே.மைதீன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கள்ளச்சாராயம் அருந்தி பலியான மக்களுக்கு 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு, அப்பாவி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பம் வாழ்வதற்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.