திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பஞ்சாமிர்த விற்பனை கடை ஏலம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்திற்குள் வியாபாரம் செய்வதற்கான கடைகளின் ஏலம் விடப்பட்டு அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 1-ந் தேதி ஆரம்பித்து அடுத்த வருடம் ஜூன் மாதம் 30 -ந்தேதி முடியும் ஒரு ஆண்டிற்கு கோவிலில்பஞ்சாமிர்தம் விற்பனை,சுற்றுச்சூழல் பூங்காவில் உள்ள கடைகளில் பொருட்கள் விற்பனை,முடி காணிக்கை,
காதுகுத்து மற்றும்காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை பொருட்கள் விற்பனை உள்பட பல்வேறு இனங்களுக்கு அனுபவ உரிமம் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோவிலுக்கு கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது. .அதேபோல கோவில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் அழகர் கோவில் துணை கமிஷனர் கலைவாணர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நடப்பு ஆண்டிற்கான அனுபவத்திற்கான பொது ஏலம் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தேவசேனாதிருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கடந்த ஆண்டு பஞ்சாமிர்தம் விற்பனைக்காக ஏலம் 10 லட்சத்து 55 ஆயிரத்திற்கு போனது ஆனால் நடப்பு ஆண்டிற்கு 18 லட்சத்து 18 ஆயிரத்திற்கு போனது. முடி காணிக்கை உரிமம் கடந்த ஆண்டில் 3 லட்சத்து 61 ஆயிரத்திற்கு போனது. நடப்பு ஆண்டிற்கு 4 லட்சத்து 25 ஆயிரத்திற்கு போனது.
உயிர் பிராணிகள் எடுத்து கொள்ளுவதில் கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்துக்கு போனது.நடப்பு ஆண்டிற்கு 2 லட்சத்து 24 ஆயிரத்து 500 க்குபோனது. சரவணப் பொய்கையில் பரிகாரம் செய்யும் உரிமத்திற்கு கடந்தாண்டில் 80 ஆயிரத்து 500 க்கு போனது.நடப்பாணடிற்கு 95 ஆயிரத்துபோனது.திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் கடை நடத்திக் கொள்வதற்கு கடந்த ஆண்டில் 2 லட்சத்து69 ஆயிரத்திற்கு போனது.
நடப்பு ஆண்டிற்கு 3லட்சத்து 2 ஆயிரத்து 500 க்குபோனது.மலைக்கு பின்புறம் உள்ளபால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் பூஜை பொருட்கள் விற்பனை செய்து கொள்ளுவதற்கு கடந்தாண்டில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்துக்கு போனது.நடப்புஆண்டிற்கு ஒரு லட்சத்து 77ஆயிரத்துக்கு போனது மலைக்குபின்புறம் சுற்றுச்சூழல் பூங்காவில் உள்ளகடை எண் 1 - க்குகடந்தாண்டில் 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு போனது.நடப்பு ஆண்டிற்கு 3 லட்சத்து 51 ஆயிரத்து . போனது.கடை எண் 2-க்குகடந்த ஆண்டில் 4லட்சத்து6 ஆயிரத்துக்கு போனது.
நடப்பு ஆண்டிற்கு 4 லட்சத்து 82 ஆயிரத்துக்குபோனது.கடை எண் 3-க்கு கடந்த ஆண்டில் 4 லட்சத்து35 ஆயிரத்துக்கு போனது. நடப்பு ஆண்டில் 5 லட்சத்து 26 ஆயிரத்துக்கு போனது.கடைஎண் 4 - க்கு 4லட்சத்து 92 ஆயிரத்து போனது.நடப்பு ஆண்டுக்கு 5 லட்சத்து 89 ஆயிரத்து போனது. இந்த ஆண்டு அதிகபட்சமாக பஞ்சாமிர்த விபூதி விற்பனை கடை 10 லட்சத்திலிருந்து 8 லட்சம் கூடுதலாக 18 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் கடந்த ஆண்டை விட 15 சதவீதம் ஏலம் கூடுதல் தொகைக்கு சென்றுள்ளதாக கோவில் இணை ஆணையர் சுரேஷ் தகவல் தெரிவித்தார்.