தபால் மூலம் வந்த ஷாக் - பரபரப்பான மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கடிதம்.;

Update: 2024-03-13 17:31 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பத்தூர் மாவட்டம் எஸ்பி அலுவலகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கடிதம் வந்தது பரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தபால் மூலம் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ராஜாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்க்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் கடிதத்தை தான் அனுப்பவில்லை என்றும், தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,  காரணமாக கடிதம் அனுப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விசாரணையில் வதந்தி கிளப்பவே கடிதம் வந்துள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News