திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று விசாரணை மேற்கொண்டார்.

Update: 2024-02-10 12:20 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவ மனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று விசாரணை மேற்கொண்டார்! திருப்பத்தூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்பல்வேறு நோய் காரணமாக உள் நோயாளியாகவும் புற நோயாளிகளாகவும் பிரசவத்திற்கு ம் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

  இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திடீரென்று அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் பொது மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவருகின்றதா என்று நோயாளிகளிடம் விசாரித்தார் நோயாளிகளுக்கு சுத்தமாகவும் சத்தான உணவுகள் அளிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார் .

மற்றும் கழிப்பிடம் மருத்துவ வளாகம் தூய்மையாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார் மருத்துவர்கள் இடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கின்றதா என்று விசாரணை மேற்கொண்டார் அதேபோல் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களிடம் பராமரிப்புகள் குறித்தும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

  மேலும் பேருந்து நிலையம் சென்று கழிப்பிடா வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார், பொது மக்களிடம் பயணிகளிடம் பாதுகாப்பு குறித்தும் பயண வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார் எண்பது குறிப்பிட தக்கது உடன் இணை இயக்குநர் மருத்துவ பணிகள் பிரபாகரன், தலைமை மருத்துவ அலுவலர் சிவகுமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News