பார்வர்ட் பிளாக் கட்சி இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்க முடிவு...

பார்வேர்ட் பிளாக் கட்சி இந்திய கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக மாநில தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு.

Update: 2024-03-09 17:53 GMT

இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு

திருப்பூர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பார்வேர்ட் பிளாக் கட்சி இந்திய கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக மாநில தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளதாக பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டம் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் கர்ணன் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பெயரில் முன்னாள் பொறுப்பாளர் கதிரவன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முன்னாள் பொறுப்பாளர் கதிரவன் எடுத்த முடிவு தன்னிச்சையான முடிவு என்றும், ஆனால் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தமிழகத்தில் உள்ள நிர்வாகிகள் பெரும்பாலானோர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் கதிரவனின் முடிவு என்பது தன்னிச்சையான முடிவு அது ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் முடிவு அல்ல என்றும் தெரிவித்தார்.

ஓரிரு நாட்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பார்வேர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு சீட்டு கேட்டு பெறப்போவதாகவும் கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அரசு 68 ஜாதியினருக்கு எதிராக பத்து புள்ளி ஐந்து சதவீதம் கொண்டு வந்து அதனால் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக முதல்வரை சந்திக்கும் பொழுது டிஎன்பி என்ற ஒற்றைச் சான்று முறையை கொண்டுவர வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.  

Tags:    

Similar News