திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை

Update: 2024-03-31 15:08 GMT
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், விழா மற்றும் முகூர்த்த நாட்களில், கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகை, வெள்ளி பொருட்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகின்றன. கோவிலில், மொத்தம் 12 உண்டியல்கள் உள்ளன. செயல் அலுவலர்கள் தியாகராஜன், குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், 65 லட்சத்து 49 ஆயிரத்து 531 ரூபாய்; 229 கிராம் தங்கம்; 7, 050 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் வருவாயாக கிடைத்தன.
Tags:    

Similar News