தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினருடன் ஆலோசனை !

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினரடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2024-03-18 09:05 GMT

ஆலோசனை

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் மற்றும் கேமரா பயன்பாட்டினை ஆய்வு செய்தார். இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அவர்களுக்கு கூறப்பட்டது. தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் 64 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு  அவர்களுக்கான வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகவும் அதனை தேர்தல் அலுவலகமான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து அதனை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திருப்பூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 23,44,810 பேர் எனவும் திருப்பூர் மாவட்டத்தில் 2520 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் 20 துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க முன்மொழிவு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவை கிடைக்கும் பட்சத்தில் 2540 வாக்கு சாவடிகளாக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார். தேர்தல் கண்காணிப்பு பணியில் 64 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு குழுவில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி மற்றும் 360 டிகிரி சுழற்சி முறையில் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தல் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். தேர்தல் பணியில் 12,500 அலுவலர்கள் , பாதுகாப்பு பணியில் 4200 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு உரிய ரசீது இருந்தால் கமிட்டி இடம் சமர்ப்பித்து அதனை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். சமூக வலைதளங்களில் பகிரப்படும் அரசியல் ரீதியான கருத்துக்கள் மற்றும் விதிமுறை மீறல்கள் தொடர்பான பதிவுகளை புகார் செய்ய மாநகர காவல்துறை சார்பில் புகார் எண் வெளியிடப்பட்டுள்ளது.‌ இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் வருவாய் அதிகாரி ஜெய் பீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News