திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பெண்ணை தாக்கிய 4 பேர் கைது!

பல்லடத்தில் பெண்ணை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-01 02:10 GMT

பைல் படம்

பல்லடத்தில் பெண்ணை தாக்கிய 4 பேர் கைது! பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி ஜோதிமணி (வயது 35) இவரது குடும்பத்தாருக்கும் அருகில் வசிக்கும் சின்னான் குடும்பத்தாருக்கும் இடையே கழிவுநீர் கால்வாய் செல்வது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரவாதம் உள்ளது. நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முக்கிய நிலையில் ஜோதி மணியை சீமான் குடும்பத்தார் கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

Advertisement

இதில் ஜோதிமணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய சின்னம் (60), அவரது மகன் கருப்பசாமி (38), ரங்கசாமி (32), செல்வராஜ் (30) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

Tags:    

Similar News