திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க கூட்டம்

திருப்பூரில் எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-15 10:33 GMT

விற்பனையாளர்கள் சங்க கூட்டம்

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் 45 நாட்களில் பில் தொகை திரும்ப பெறுதல் சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து, திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம், குமார் நகர் 60 அடி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதற்கு சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கி பேசினார். செயலாளர் சௌந்தர்ராஜன் முன்னிலை வைத்தார். இந்தக் கூட்டத்தில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், 45 நாட்களில் பில் தொகையை திரும்ப பெறுதல் சட்டம் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தற்போது உள்ள தொழில் நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுபோல் ஜெட் ஈடி சான்றிதழ் குறித்து சக்திவேல் விளக்கம் அளித்தார். அப்போது வட்டி மானியம், கடன் மானியம், போக்குவரத்து மானியம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில் எலாஸ்டிக் உற்பத்திக்கு தேவையான ரப்பர், நூல், பாலிஸ்டர் நூல் உள்ளிட்டவைகளை உற்பத்தியாளர்கள் மொத்தமாக கொள்முதல் செய்து, கடனுக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதுபோல் விற்பனையாளர்கள் பலர் பணம் தர நீண்ட நாட்கள் ஆகிறது. இதனால் சிறு குறு நடுத்தர நிறுவன பில் தொகை 45 நாட்களுக்கு திரும்ப பெறுதல் சட்டத்தை வரவேற்பது. இதன் மூலம் பணம் விரைவாக கிடைக்கும். தொழில்துறையினரின் சிரமத்தை போக்கும் வகையில் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்ய எளிதாக இருக்கும். 20 சதவீத தொழில் விற்பனையாளர்கள் சார்ந்து இருப்பதால், விற்பனையாளர்களையும் இந்த சட்டத்திற்கு கொண்டுவர கேட்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News