தங்கம் குவித்த திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள்

தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்களை குவித்துள்ளனர்.;

Update: 2024-04-08 08:45 GMT

தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்களை குவித்துள்ளனர்.

தேசிய அளவிலான போட்டியில் தங்கத்தை குவித்த அரசு பள்ளி மாணவர்கள். திருப்பூர், தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் தங்க பதக்கங்களை அரசு பள்ளி மாணவர்கள் குவித்துள்ளனர்.

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் கைலாஷ் மற்றும் தினநாத், இதுபோல் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் யகேந்திரன், கோவை தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிற மாணவர் கோகுல். இவர்கள் 4 பேரும் ஹரியானா மாநிலத்தில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தங்கப்பதக்கங்களை குவித்துள்ளனர்.

Advertisement

அதன்படி 18 வயது பிரிவில் கைலாஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கமும், 400 மீட்டர் தடை தாண்டுதலில் தங்கமும் பெற்றார். தினநாத் 5 ஆயிரம் மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பிரில் பிரிவில் தங்கபதக்கமும், 19 வயது பிரிவில் யகேந்திரன் 1500 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கமும், 20 வயது பிரிவில் கோகுல் 1500, 800 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கபதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் வருகிற மே மாதம் 7&ந் தேதி நேபாளில் நடக்கும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்கிறார்கள்.

Tags:    

Similar News