நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் திருப்பூர் குமரன் சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் கொண்டாட்டம் !!

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் நடந்த திருப்பூர் குமரன் சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா நடைபெற்றது.;

Update: 2024-10-04 07:54 GMT
நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் திருப்பூர் குமரன் சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் கொண்டாட்டம் !!

Tirupur Kumaran Subramania Siva Birthday 

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் திருப்பூர் குமரன் சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா சிந்தனைப் பேரவை, கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டம் சார்பில் நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் திருப்பூர் குமரன் சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் முனைவர் டி. எம். மோகன் அனைவரையும் வரவேற்றார். தியாக செம்மல் திருப்பூர் குமரன் படத்துக்கு நம்பிக்கை இல்லம் இயக்குனர் கதிர்செல்வன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். வீரமுரசு சுப்ரமணிய சிவா படத்துக்கு ஜே.சி.ஐ & பி.ஏ.ஐ முன்னாள் தலைவர் என்ஜினியர் மணி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சித்திக் "தியாகிகளின் தியாகம்" என்ற தலைப்பில் திருப்பூர் குமரன் சுப்பிரமணிய சிவா அவர்களின் சுதந்திர போராட்ட தியாகத்தை பற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்வுக்கு ராமகிருஷ்ண கான சபா பொருளாளர் துரைராஜ், தமிழ் ஆர்வலர் மார்ட்டின் கிறிஸ்டோபர், பாலாஜி, நூலக புரவலர்கள் தோழர் ராமசாமி, முகமது ரபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியில் வாசகர் வட்ட பொருளாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.


Tags:    

Similar News