திருத்தங்கலில் ஆனி பிரமோற்சவ தேரோட்ட விழா

சிவகாசி அருகே திருத்தங்கல் ஆனி பிரமோற்சவ தேரோட்ட விழாவை முன்னிட்டு நீர்,மோர் பந்தலை மாநகராட்சி மேயர் சங்கீதா திறந்து வைத்தார்.

Update: 2024-06-25 13:33 GMT

சிவகாசி அருகே திருத்தங்கலில் ஆனி பிரமோற்சவ தேரோட்ட விழாவை முன்னிட்டு நீர்,மோர் பந்தலை மாநகராட்சி மேயர் சங்கீதா திறந்து வைத்தார்.


சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம் இன்றுகாலை வெகு விமரிசையாக நடந்தது.108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம்.திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயிலாகும்.

இக்கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.13 நாட்கள் நடைபெற்றன. மேலும் தேரோட்டத்தையொட்டி சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் எழுந்தருளிய தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் வரும் பக்தர்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட 5 வது மாமன்ற உறுப்பினர் திருமதி இந்திரா தேவி மாரீஸ்வரன் ஏற்பாட்டில் நீர்,மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்வை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா பக்தர்களுக்கு குளிர்பானங்கள்வழங்கினார்.மேலும் நிகழ்வின்போது முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் பொன்சக்திவேல் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News