வைத்தீஸ்வரன்கோவிலில் திருத்தேர் உற்சவம்

புகழ் பெற்ற வைத்தீஸ்வரன்கோவிலில் திருத்தேர் உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Update: 2024-02-06 06:58 GMT


புகழ் பெற்ற வைத்தீஸ்வரன்கோவிலில் திருத்தேர் உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்


புகழ் பெற்ற வைத்தீஸ்வரன்கோவிலில் திருத்தேர் உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஆலயமாக இது விளங்கி வருகிறது. இங்கு முருகனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது புகழ் பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான இந்த ஆலயத்தின் தை மாத உற்சவம் கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

9 ஆம் நாள் திருவிழாவாக இன்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது இதனை முன்னிட்டு செல்லமுத்து குமாரசாமி சிறப்பு அலங்காரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார் தொடர்ந்து மகா தீபாராதனைக்கு பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்த பின்பு மீண்டும் ஆலயத்தை வந்தடையும்.

Tags:    

Similar News