திருவள்ளுவர் திருத்தேர் நகர்வலம்
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறையில் திருவள்ளுவர் திருத்தேர் நகர்வலம் நடந்தது.
Update: 2024-01-16 09:58 GMT
பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று, திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை சார்பில், திருத்தேர் நகர்வலம் நடைபெற்றது. அவ்வையார் தேரை ஓட்டுவது போல் திருவள்ளுவரின் சிலையுடன், காவிரிக்கரையிலிருந்து திருத்தேர் நகர்வலம் துவங்கியது. நகர்வலத்தை மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீனா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றி ரத நகர்வலத்தை துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியே நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. , திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும், திரளான பொதுமக்கள், தமிழறிஞர்கள், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனையடுத்து மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 108 வது கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது தமிழ் அறிஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் 133 அதிகாரங்களால் திருவள்ளுவர் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்து பிரபாகரன் என்ற இளைஞர் தமிழ் சங்கத்துக்கு வழங்கினார்.