திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் வருஷாபிஷேக விழா !
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப்பின்னர் கடந்த 2022 ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் , அதை கணக்கில் கொண்டு, ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான ஜூலை 12 வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
By : King 24x7 Angel
Update: 2024-07-09 05:11 GMT
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப்பின்னர் கடந்த 2022 ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் , அதை கணக்கில் கொண்டு, ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான ஜூலை 12 வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.10. ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஆச்சார்ய வர்ணம்,பிரசாத சுத்தி பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து கலசம், அஸ்திர கலச பூஜை வாஸ்து பலி, வாஸ்து கலசாபிஷேகம், வாஸ்து புண்ணியாஹம், அத்தாழ பூஜை ஆகியன நடக்கிறது. இரண்டாம் நாள் (11. ந் தேதி) காலை கணபதிஹோமம், சுகிர்த ஹோமம், பிம்ப சுத்தி கலச பூஜை சதுர் சுத்தி தாரை, பஞ்ச கவ்வியம், பஞ்சகம், பிம்ப சுத்தி கலச அபிஷேகம், உச்ச பூஜை உதயமார்த்தாண்ட மண்டபத்தில் மண்டப சுத்தி ஆகியனவும், மாலை பிரம்ம கலச பூஜை, அதிவாச ஹோமம், அத்தாழ பூஜை, அத்தாழ ஸ்ரீ பலி ஆகியன நடக்கிறது.3. ம் நாள் (12. ம் தேதி வெள்ளிக்கிழமை ) காலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பைத்தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியன நடக்கிறது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜையை கோகுல் தந்திரி நடத்துகிறார். பின்னர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.மாலையில் அலங்கார தீபாராதனையைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் “லட்சதீப விழா” நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றுகின்றனர்.