வட்டார கல்வி அலுவலகம் முன் டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம் !
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், திருக்கோவிலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-09 06:30 GMT

ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், திருக்கோவிலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ரவி தலைமை தாங்கினார். தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். டிட்டோ - ஜாக் வட்டார ஒருங்கிணைப்பாளர் சதீஷ் வரவேற்றார். நிர்வாகிகள் ரமேஷ், புஷ்பராஜ், செல்வம், அசோக்குமார், பாக்கியநாதன், திருமலை, சாந்தி ஆகியோர் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.