நாமக்கல்லில் டிட்டோஜாக் உண்ணாவிரதம்!

நாமக்கல்லில் டிட்டோஜாக் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-01-28 11:29 GMT

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அமைப்பினர்

நாமக்கல்லில் டிட்டோஜாக் உண்ணாவிரதம்! பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (டிட்டோஜாக்) ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய - நகராட்சி பணிமூப்பினை மறுத்து மாநில பணிமூப்பினை திணிக்கும் அரசாணை எண் : 243 ஐ முற்றாக ரத்து செய்யக்கோரியும், 12.10.2023 ஆம் நாள் பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் பழனியப்பன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினார், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் முத்துசாமி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார்.

இதில் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட திரளான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News