பாஜக அரசு மீது முதல்வர் குற்றசாட்டு

சீன பட்டாசுகளை பாஜக அரசால் தடுக்க முடியவில்லை என தமிழக முதல்வர் ஸ்ரீவில்லிபுத்தூர் நடந்த பொதுக்கூட்டத்தில் குற்றச்சாட்டினார்.

Update: 2024-03-28 11:51 GMT
சீன பட்டாசுகளை பாஜக அரசால் தடுக்க முடியவில்லை என தமிழக முதல்வர் ஸ்ரீவில்லிபுத்தூர் நடந்த பொதுக்கூட்டத்தில் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தென்காசி தொகுதி தி.மு.க வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் ஆகியோரை ஆதரித்து பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் இதுவரை 10 தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ளதாகவும்,மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும் காலையில் வாக்கிங் போகும்போது பெண்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும்,தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு திட்டத்தில் நேரடியாக பயன்பெற்றிருப்பார்கள். பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் பல திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளது என்றும் வரலாறும் மக்களும் கொடுத்த வாய்ப்பால் 16 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் 1.15 கோடி மகளிருக்கு கலைஞர் உரிமை என நலத்திட்டங்களை பட்டியலிட்டு சொன்னதை செய்துவிட்டுத்தான் தங்களிடம் வாக்குக்கேட்டு வந்திருப்பதாக பேசினார்.

பின்னர் மத்திய பாஜக அரசை சாடிய ஸ்டாலின், மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர் கல்வியை காலம்காலமாக தடுத்துவரும் பாஜக அரசு புதிய கல்விக்கொள்கெயை நடைமுறைபடுத்தப் பார்க்கிறது என்றும் பொருளாதார அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிப்பதை விட்டுவிட்டு சாதிவாரி கணக்கெடுப்பின் படி வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தன்னாட்சி அமைப்புகளைக் கூட கூட்டணி கட்சிப்போல நடத்துகிறது என்றார்.

சீன பட்டாசுகளை பாஜக அரசால் தடுக்க முடியவில்லை இதனால் சிவகாசியில் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிப்போய் உள்ளதாகவும் ஏற்கனவே 28 சதவிகிதம் ஜி.எஸ். டி போட்டு அதற்காக அவர்கள் 12 சதவிதமாக மாற்ற போராட்டம் நடத்தியதாகவும்,பட்டாசு சம்மந்தமாக நீதி மன்றத்தில் வழக்கு நடந்தபோது மத்திய அரசு முறையான வாதம் வைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய ஸ்டாலின், பசுமை பட்டாசு தயாரிக்க உற்பத்தியாளர்கள் தயாராக இருந்த போதும் அதற்கான வரையறையை மத்திய அரசு வழங்கவில்லை என்றார்.

எனவே இது பாசிசத்தை வீழ்த்தி, இந்தியாவை காக்க நாற்பதையும் வென்றாக வேண்டும் என்றும் இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல்,டீசல்,கேஸ் விலைகுறைப்பு போன்ற வாக்குறுதிகளையும் எடுத்துச்சொல்லி விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கை சின்னத்திலும் மற்றும் தென்காசி தொகுதி தி.மு.க வேட்பாளர் ராணிஸ்ரீகுமாருக்கு உதய சூரியன் சின்னத்திலும் வாக்கு சேகரித்தார். இக்கூட்டத்தில் தென்காசி,விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து தி.மு.க கூட்டணி கட்சிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News