சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு எஸ் பி பாராட்டு !
சிறப்பாக பணி முடிந்த காவலர்களுக்கு எஸ் பி பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
Update: 2024-07-04 05:58 GMT
எஸ் பி அலுவலகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் உட்கோட்ட சிறப்பு பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதம் இன்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ,தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது . மேலும் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கு எஸ் பி ஜெயக்குமார் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.