திருவட்டார் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா
திருவட்டார் ஆதிகேசவன் கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில், பெருமாளை தரிசிக்க அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.;
Update: 2023-12-23 05:52 GMT
திருவட்டார் ஆதிகேசவன் கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில், பெருமாளை தரிசிக்க அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.
108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடந்தது. பின்னர் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு கலச பூசைகள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் கருவறைக்கு அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கொண்டு செல்லப்பட்டன . தொடர்ந்து ஸ்ரீபலி பூஜை, பக்தர்கள் ஒற்றைக் கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் 3 வாயில்கள் வழியாக சாமி தரிசனம் செய்யும் நிகழ்சி நடந்தது. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.