தொல்காப்பியர் நூல் வெளியிட்டு விழா!
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் திருவள்ளுவர் இலக்கிய பேரவை சார்பில் தொல்காப்பியர் நூல் வெளியிட்டு விழா கல்லூரியில் நடந்தது.;
Update: 2024-02-17 07:30 GMT
தொல்காப்பியர் நூல் வெளியிட்டு விழா!
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் திருவள்ளுவர் இலக்கிய பேரவை சார்பில் தொல்காப்பியர் நூல் வெளியிட்டு விழா கல்லூரியில் நடந்தது. உதவி பேராசிரியர் சண்முகப்பிரியா வரவேற்றார். உதவி பேராசிரியர் தண்டபாணி அறிமுக உரை நிகழ்த்தினார். மதுரை தியாகராஜர் கல்லூரி தமிழிசை ஆய்வு மைய முதன்மை ஆய்வாளர் மம்மது, மதுரை தொல்காப்பியர் மன்ற தலைவர் இருளப்பன், மதுரை வருமான வரி ஆலோசகர் சங்கரகுமரன் வாழ்த்துரை வழங்கினர்.கல்லூரி முதல்வர் நாகநந்தினி தலைமை வகித்து நூலை வெளியிட புரவலர் சுந்தரராசன் பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.