தொல்காப்பியரின் பிறந்தநாள் - ஆர்டிஓ தமிழரசி மாலை அணிவித்து மரியாதை
தொல்காப்பியர் பிறந்த நாளை முன்னிட்டு காப்பிகாடு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பத்மநாபபுரம் ஆர்டிஓ தமிழரசி மாலை அணிவித்து மரியாதை.
Update: 2024-04-23 17:13 GMT
தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். இதனை எழுதிய தொல்காப்பியர் குமரி மாவட்டம் கப்பிக்காட்டில் பிறந்தவர். தொல்காப்பியரின் தமிழ் சேவையை பாராட்டும் வகையில் அவர் பிறந்த காப்பிக்காட்டில் சதாசிவம் மனோன்மணிபுரம் தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடத்தில் ஐந்தரை அடி உயரம், 4 அடி அகலம், 700 கிலோ எடையில் தொல்காப்பியரின் வெண்கல சிலை, 11 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.தொல்காப்பியரின் பிறந்தநாளை யொட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாத்தாண்டம் காப்பு காடு பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று பத்மநாபபுரம் ஆர்டிஒ தமிழரசி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்வளர்ச்சிதுறை உதவி இயக்குநர் கனகலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.