கன்னியாகுமாரியில் சுற்றுலா விழிப்புணர்வு கூட்டம்
கன்னியாகுமாரியில் போலீல் இன்ஸ்பெக்டர் தலைமையில் சுற்றுலா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி காவல் துறை சார்பில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் கன்னியாகுமரி உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடந்தது. கூட்டத்தில் தங்கும் விடுதி உரிமையார்கள், வியாபாரிகள், கார், ஆட்டோ ஓட்டுனர்கள், உருட்டு வண்டி வியா பாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமை தாங்கி பேசியதாவது: - சர்வதேச சுற்றுலாத் தல மான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணி களை பாதுகாப்பது நமது கடமை ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னி குமரியில் வசிக்கும் ஆந்திர மாநில சிறுமி கடத்தப் பட்டார். மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிக்கப்பட்டு 12 மணி நேரத்தில் சிறுமி மீட்கப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தங்கும் விடுதி நிர்வாகத்தினர், வியாபாரிகள், கார், ஆட்டோ ஓட்டுனர்கள், உருட்டு வண்டிய வியா பாரிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
சந்தேகப்படும் படி வரும் நபர்களை கண் காணித்து காவல்துறைக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் தகவலின் பெயரில் நாங்கள் உடனே நடவடிக்கை எடுப்போம். காவல் துறைக்கு நண்பனாக நீங்கள் செயல்பட வேண்டும். அப்போதுதான் கன்னியா குமரி வரும் சுற்றுலா பய ணிகளை பாதுகாப்பதற்கு வாய்ப்பாக அமையும். கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 25-ம் தேதி இந்த புறக்காவல் நிலையம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கண் காணிப்பு கேமரா மூலம் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் தங்க வரும் சுற்றுலா பய ணிகளை முறையான ஆவணங்கள் பெற்று தாங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து தங்கும் போது தவறான நோக்கத்தோடு யாரும் வந்தாலோ, போதைப் பொருட்கள் விற்பனை பற்றி தகவல் தெரிந்தாலோ உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.