திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழையால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் கொட்டும் நீரில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலிட்டனர்.

Update: 2024-04-26 04:51 GMT

திற்பரப்பு அருவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில் மக்கள் நீர் நிலைகள் சார்ந்த சுற்றுலா தலங்களை தேடி சென்று வருகின்றனர். கடும் வெயிலுக்கு இடையே குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வற்றாமல் தண்ணீர் கொட்டுகிறது.எனவே உள் நாட்டு,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரையும் தன்வசம் ஈர்த்துள்ளது. கடந்த நாட்களாக அருவியில் நீரோடை போலவே தண்ணீர் விழுந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் குமரி மாவட்டத்தின் மலையோர பகுதி மற்றும் பரவலாக கோடை மழை பெய்தது.கோடை மழையால் புத்துயிர் பெற்ற திற்பரப்பு அருவியில் தற்போதும் மிதமான அளவில் குளிர்ந்த தண்ணீர் கொட்டுகிறது.இதனால் தினமும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளு குளு குளியல் போட்டு வருகின்றனர். அந்த வகை யில் இன்று காலையிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கினர்.சுற்றுலா பயணிகள் வருகையால் அருவியின் மேல் தடாகத்தில் உள்ள தடுப்பணையில் படகு சவாரியும் களை கட்டியது. சுற்றுலா பயணிகள் படகில் அமர்ந்தவாறு கோதையாறு மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியை கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News