வறண்ட குற்றால அருவிகள் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்

குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2024-04-04 02:55 GMT

குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


தென் தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவது தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம். மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி என உள்ளன. கோடைகாலம் தொடங்கியதால் தற்போது தண்ணீர் வரத்தின்றி வெறும் பாறைகளாக காட்சி தருகிறது. ஆன்மிக சுற்றுலா பயணமாக பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு குற்றாலத்திற்கு வந்தோம். அருவிகள் வறண்டிருப்பதால் ஏமாற்றமடைந்தோம். மெயின் அருவியில் விழுந்த சிறிதளவு விழும் தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு குற்றாலீஸ்வரரை தரிசித்து விட்டு கிளம்புகிறோம் 'என்றார். பேன்சி கடை நடத்தும் வேல்ராஜ் கூறுகையில் 'பொதுவாக குற்றாலத்தில் சீசன் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். தொடர்ந்து ஆறு மாதத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணியர் வருவர். ஏப்ரல், மே மாதங்களில் தண்ணீர் வராது. ஆனால், இது பலருக்கு தெரியாமல் வந்து ஏமாறுகின்றனர்,”என்றார்.
Tags:    

Similar News