விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !!

கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 3 நாட்களாக தியானம் செய்து வருகிறார்.

Update: 2024-06-01 06:47 GMT

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 3 நாட்களாக தியானம் செய்து வருகிறார். இதற்காக நேற்று முன்தினம் மாலை பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார். இன்று 3-வது நாளாக அங்கு பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று  11 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு சென்ற படகு திரும்பி வந்த பிறகு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை அமலில் இருக்கும் என்று பூம்புகார் படகு கழகம் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடி தனது தியானத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் 3 மணிக்கு புறப்படுகிறார் என்பது குறிப்பிட தகுந்ததாகும்.

Tags:    

Similar News