பூலாம்பட்டி படகுத் துறையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து உற்சாகம் !

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த போலாம்பட்டி காவேரி ஆற்று படகு துறையில் சுற்றுலாப் பயணிகள்படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Update: 2024-07-16 06:33 GMT

சேலம்

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவேரி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  இதனால் காவேரி ஆற்று நீர் பறந்து விரிந்து கடல் போல் காட்சியளிக்கிறது.  காவேரி கரையோர பகுதியான நெருஞ்சிப்பேட்டை,பூலாம்பட்டி,கூடக்கல், குப்பனூர் பகுதிகளை இணைத்து மலைச் சார்ந்த பகுதியாக பசுமையான இயற்கை ரம்யமான காட்சி அளிப்பதால் இதனை குட்டி கேரளா என அழைக்கப்படுகிறது.

 சேலம் மாவட்டம் பூலாம்பட்டி,ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை இடையே விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமை இன்று சேலம் மற்றும் ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து வந்து படகு சவாரி செய்து இயற்கையான சூழலை ரசித்தும்  தொடர்ந்து பூலாம்பட்டி படகு துறை அருகே அமைந்துள்ள மீன் கடைகளில் பொறித்த மீன்களை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வாங்கி சுவைத்து சென்றனர்

Tags:    

Similar News