ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பக்ரீத் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
Update: 2024-06-17 02:49 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரியாற்றில் வினாடிக்கு 700 கன அடி வீதம் நீர்வரத்து குறைந்து காணப்பட்டு வரும் நிலையில், பக்ரீத் பண்டிகை விடுமுறை காரணமாக நேற்று காலை முதலே பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர் .அவர்கள் அருவிகளில் குளித்தும், எண்ணெய் மசாஜ் செய்து கொண்டும் மெயின் அருவி சினி ஃபால்ஸ் முதலைப்பண்ணை மற்றும் பரிசலில் சென்றும் குடும்பத்துடன் மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.