ஒகேனக்கலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
விடுமுறை தினத்தை ஒட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.;
Update: 2024-06-10 02:19 GMT
பரிசல் பயணம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். நேற்று ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை மற்றும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நேற்றுடன் முடிவதை அடுத்து காலை முதல் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்தது. சமீப காலமாக பெய்த கனமழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரின் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். குறிப்பாக சினி ஃபால்ஸ், ஐந்தருவி, தொங்கும் பாலம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.