மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலைச்சிற்பங்கள் மற்றும் இயற்கை எழில் கடற்கரை ஆகியவை, சுற்றுலா பயணியரை கவர்கின்றன. வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில், பயணியர் இங்கு படையெடுப்பர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறையாக உள்ளபோது, தினமும் பயணியர் பல்லாயிரக் கணக்கானோர் திரள்வர். தற்போது, இம்மாத துவக்கம் முதல், கோடை வெயில் சுட்டெரித்ததால், பயணியர் குறைவாகவே வந்தனர். மே தினம் மற்றும் அடுத்தடுத்த வார இறுதி நாட்களிலும், பயணியர் மிக குறைந்து, சுற்றுலா களையிழந்தது. பின், மழை காரணமாக, இதமான சூழல் நிலவியதால், பயணியர் வருகை அதிகரித்தது. பள்ளிகளை ஜூன் 6ம் தேதி திறக்க, அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது.
கோடை விடுமுறையும் முடிவடைய உள்ளது. இந்நிலையில், ஞாயிறு அரசு விடுமுறை நாளான நேற்று, பயணியர் இங்கு படையெடுத்தனர். கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, குடைவரைகள் ஆகியவற்றை கண்டு ரசித்தனர். நேற்று, மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்கள் குவிந்து அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.