திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் 

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.;

Update: 2024-02-26 03:34 GMT
திற்பரப்பு அருவி

குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் நீர்நிலை சார்ந்த சுற்றுலா தலங்களை தேடி வருகிறார்கள். அதன்படி சுற்றுலா பயணிகளை கவர்ந்த குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தற்போது தண்ணீர் வரத்து மிதமாக உள்ளது. இதனால் வெயிலுக்கு இதமாக நீராடும்  வகையில் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.      குறிப்பாக விடுமுறை நாட்களில் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Advertisement

அதே சமயம் அருவி அருகே உள்ள சிறுவர் நீச்சல் குளம் மற்றும் பூங்கா பகுதிகளிலும் திரளானவர்கள் குவிந்த தை காண முடிந்தது.       மேலும் சுற்றுலா பயணிகள் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கோடை விடுமுறை நாட்களில் இங்கு மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில் உள்ளதால், இந்த அருவியில் கூடுதல் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News