ஏற்காட்டில் படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காட்டில் படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சவாரி செய்து மகிழ்ந்தனர்

Update: 2024-05-10 10:14 GMT

ஏற்காட்டில் பெய்த பலத்த மழையால் குளிர் காற்று வீசியது. இதனால் படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். ஏற்காடு மலைக்கு தினமும் சுற்றுலா பயணிகள் சென்று வருவார்கள். கோடை காலத்தில் அதிகளவில் சுற்றுலா பணிகள் செல்வார்கள். இந்தாண்டு வழக்கத்தை விட கோடை வெப்பம் வாட்டி வதைத்தது. இதில் இருந்து தப்பிக்க ஏராளமான சுற்றுலா பணிகள் ஏற்காட்டிற்கு படையெடுத்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு விரைவில் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக அண்ணா பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்ட பூக்கள் பூத்து உள்ளன. இதனால் குவியல், குவியலாக மலர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. நேற்று மதியம் 1 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இந்த மழை 1 மணி நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காட்டில் லேசான மழை பெய்தாலே குளிர்காற்று வீசும். நேற்று மதியம் 1 மணிநேரம் மழை பெய்ததால், அதிகம் குளிர்காற்று வீசியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் குவிந்து கட்டணம் செலுத்தி படகு சவாரி செய்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.

Tags:    

Similar News