கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்
விடுமுறை தினம் முன்னிட்டு கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள் அலைமோதிய கூட்டம்.
By : King 24x7 Angel
Update: 2024-02-24 11:54 GMT
கன்னியாகுமரிக்கு வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுவது வழக்கம். அதன்படி விடுமுறைநாளான இன்று (சனிக்கிழமை) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள், கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் திரண்டு இருந்தனர்.இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர். அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். சுமார் 1 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.