கன்னியாகுமரியில் விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வார இறுதியான இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2024-03-03 12:08 GMT
கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இன்று குவிந்த பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வார இறுதி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுகிழமை) சுற்றுலா பயணிகளின் வருகை அதிமாக இருந்தது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியில் நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகுபோக்குவரத்து தொடங்கியது. சுமார் 2மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர். மேலும் கன்னியாகுமரி அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News